பி.எஸ்.எம்.சார்ள்ஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.



தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்த விடயத்தை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்த விடயம் பி.எஸ்.எம். சார்ள்ஸிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அவருக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை தேர்தல் ஆணைக்குழுவின் பதவி ஒருவர் விலகுவதால் எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை