போராட்டக்காரர்கள் பயணித்த பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல்!



வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியில் போராட்டக்காரர்கள் பயணித்த பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட இராணுவ முகாம் அருகில் இன்று (07.02.2023) இடம்பெற்ற இந்த கல்வீச்சு தாக்குதலில் பேருந்தின் முற்பகுதி கண்ணாடி முற்றாக சேதமடைந்துள்ளது.

வலிந்து காணமலாக்கப்பட்டோரது உறவுகள் பயணித்த பேருந்தே இவ்வாறு கல்வீச்சு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.



யாழில் இருந்து கடந்த 04ஆம் திகதி சுதந்திர தினத்தன்று, சுதந்திர தினத்திற்கு எதிரான பேரணி கிழக்கு நோக்கி புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை