திருகோணமலை–தோப்பூரில் காட்டு யானை தாக்கி ஒருவர் நேற்று(14.02.2023) உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தோப்பூர் - அல்லைநகர் 09 எனும் கிராமத்தைச் சேர்ந்த குப்பைத்தம்பி அப்துல்காதர் என்ற 83 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கோவமடைந்த யானை
குடியிருப்பு காணியில் நுழைந்த காட்டு யானை வீட்டில் இருந்த தென்னைமரத்தை சாய்த்து சேதம் செய்துள்ளது அப்போது சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே வந்த குப்பைத்தம்பி அப்துல்காதர் யானையை சீனா வெடி வெடித்து துரத்த முயற்சித்துள்ளார்.
இதன்போது கோவமடைந்த யானை அவரை துரத்தி வீட்டுக்குள் நுழைந்தபோது அவரை வீட்டுக்குள் வைத்து தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சமயம் அவருடன் அவரது மனைவியும் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.