குழந்தைகளின் பசிபோக்க பலாக்காய் பறிக்க சென்ற தாய் மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு!



குழந்தைகளின் பசி தீர்க்க பலாப்பழம் பறிக்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தாய் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கம்பளை, நாரங்விட்ட, பண்டாரவத்தை பகுதியைச் 50 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர், மூவரும் பாடசாலை செல்லும் வயதுடையவர்கள்.

மேலும் அவரது கணவர் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். கணவன் சம்பாதிக்கும் சொற்ப வருமானம் குடும்பப் பராமரிப்பிற்குப் போதாததால் இவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

உணவுக்கே பெரும் திண்டாட்டத்தை எதிர்கொண்ட நிலையில்
இந்த தாய் அருகில் உள்ள மரத்தில் பலாக் காயை கண்டு குழந்தைகளின் மதிய உணவைக்காக மரத்தில் ஏறி அதனை பறிக்க முயன்றுள்ளார்.

மரத்திலிருந்து தவறி விழுந்த இத்தாய் ஐந்து நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மரணமடைந்துள்ளார்.
புதியது பழையவை