14 மாவட்டங்களில் கடும் மழை, மின்னல் எச்சரிக்கை!மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

அதற்கமைய, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பதுளை, மொனராகலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம அதிளவில் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதியது பழையவை