விலை உயர்த்தப்பட்ட உதிரிப்பாகங்கள்



சந்தையில் வாகன உதிரிப்பாகங்களின் விலை 300 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சாரதிகள் தெரிவித்தனர்.

வாகன உதிரிப்பாகங்களை விற்கும் சில டீலர்கள் தன்னிச்சையாக விலையை அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வாகன உதிரிப்பாகங்களான வாகன பற்றறிகள், மின்விளக்குகள், பக்கவாட்டு கண்ணாடிகள், வாகன தகடுகள், இன்ஜின்கள், டயர்கள், ரப்பர் புஷ், வேஃபர்கள், ரிம்கள், கூலன்ட், பற்றறி வோட்டர், பல்புகள், வில்லுத்தகடு போன்றவற்றின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக சாரதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

12,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட டயர் ஒன்றின் விலை 38,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சாரதிகள் தெரிவித்துள்ளனர். 4500 ரூபாவாக இருந்த ஒரு பக்க கண்ணாடி 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தையில் வாகன உதிரிப்பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சில நிதி நிறுவனங்கள் கடன் கடிதம் வழங்காததால், உதிரி பாகங்கள் இறக்குமதி செய்வதில் தடை ஏற்பட்டுள்ளதாக வாகன உதிரிபாகங்கள் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புதியது பழையவை