மின் வெட்டு குறித்து புதிய அறிவிப்பை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளதுஇன்று (05.02.2023) 2 மணிநேரம் இருபது நிமிடங்களும்  நாளை (06.02.2023) 2 மணித்தியாலங்களும் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

நீர் மின் உற்பத்திக்கான நீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும், அனல் மின் உற்பத்திக்கான எரிபொருள் பற்றாக்குறையாலும் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக அறிக்கையொன்றில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்சார முகாமைத்துவ நடவடிக்கை
எவ்வாறாயினும், நீர் மின் நிலையங்களைச் சூழ பதிவாகும் மழை வீழ்ச்சியின் பிரகாரம் மின்சார முகாமைத்துவ நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படலாம் என மின்சார சபை அறிவித்துள்ளது.
புதியது பழையவை