உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், 2019ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி கைது செய்யப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு புதிய காத்தான்குடி விடுதி வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை இன்று காலை உயிரிழந்துள்ளார்.
மாரடைப்புக் காரணமாக வெலிக்கடைச் சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சந்தேக நபர் உயிரிழந்ததாகவும், உயிரிழந்தவருக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.