பாதாள உலகக் குழுவின் முக்கிய புள்ளியாகக் கருதப்படும் ‘கிம்புலா எல குணா’ என்ற நபர் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் அதி சொகுசு காரொன்றை அம்பாறை கல்முனை தலைமையக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் தேடப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வழங்கிய தகவலுக்கு
அமையவே சொகுசு கார் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டுள்ள காரின் பெறுமதி சுமார் 1 அரைக்கோடி ரூபா பெறுமதி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. காரின் பதிவு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, சம காலத்தில் வாகனத்தின் உரிமை பலரது பெயர்களுக்கு மாற்றப்பட்டமையைக் கண்டறிந்தனர்.
வாடகைக்கு அமர்த்தி, சொகுசு காரில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்றதா? என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், காரின் உரிமையாளர் என அடையாளங் கண்டுள்ள நபரை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறும் பணித்துள்ளனர்.