போரதீவுப்பற்று களுமுந்தன்வெளிக் கிராமத்தில் அறுவடை நிகழ்வுமட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பழுகாமம் விவசாய விரிவாக்கல் நிலையத்தின் கீழுள்ள களுமுந்தன்வெளிக் கிராமத்தில், பாரம்பரிய நெற் செய்கை மற்றும் உபஉணவு பயிற்செய்கை அறுவடை விழா விவசாயப் போதனாசிரியர்
பரமேஸ்வரன் சகாப்தனின் ஒழுங்கமைப்பில் நேற்று நடைபெற்றது.

இதன்போது ஏற்கனவே அப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் அரை மானியத்தித்தின் கீழ் ஒரு கிலோ நெல் 125 ரூபாவிற்கு வழங்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் 120 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்டிருந்த பாரம்பரிய நெல்லினமான பச்சைப் பெருமாள், மடத்தவழு, ஆகிய நெல்லினங்;கள் அறுவடை செய்யப்பட்டன.

அப்பகுதியில் சுமார் 25 ஏக்கருக்கு மேல் செய்கை பண்ணப்பட்டிருந்த நிலக்கடலையும் அறுவடை செய்யப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன், விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் ப.பேரின்பராசா, தெற்கு வலய உதவி விவசாயப் பணிப்பாளர் எஸ்.சித்திரவேல், போரதீவுப் பற்று உதவிப் பிரதேச செயலாளர் வி.துலாஞ்சன், பாடவிதான உத்தியோகஸ்த்தர்களான லாவன்யா செந்தீபன், என்.லஸ்மன், மற்றும் விவசாயப் போதனாசிரியர்கள், தொழில் நுட்ப உத்தியோகஸ்த்தர்கள்,
கிராம சேவை உத்தியோகஸ்த்தர், பொதுமக்கள், விவசாயிகள் என பலரும் அறுவடை நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
புதியது பழையவை