இந்தியாவில் மீண்டும் நிலநடுக்கம்



இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் இன்று (13)அதிகாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

4.3 ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிக்கிமின் யுக்சோம் நகரத்திற்கு வடமேற்கே 70 கிலோமீட்டர் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அசாமில் நிலநடுக்கம்
இதேவேளை நேற்றைய தினம் அசாமில் 4 ரிக்கடர் அளவில் நிலநடுக்கம் ஏற்ட்டிருந்தது.

நேற்று மாலை 4.20 மணியளவில் அசாமில் இந்த நிலநடுக்கம் பதிவான நிலையில் அடுத்த 12 மணிநேரத்தில் சிக்கிமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
புதியது பழையவை