உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமை உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சகல கட்சிகளினதும் செயலாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு
இன்று (13.02.2023) இந்த கலந்துரையாடல் நடத்தப்படுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளரொருவரால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.