புதிய சுற்றுலா மொபைல் செயலியை இலங்கை அறிமுகப்படுத்துகிறது!



வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக 7 மொழிகள் கொண்ட புதிய சுற்றுலா மொபைல் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் பெர்னாண்டோ, அனைத்து முச்சக்கர வண்டிகளையும் மொபைல் செயலி பதிவு செய்யும் என்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஸ்கேன் செய்ய வாகனத்தில் பார் குறியீடு காட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.



பொலிஸார் செயலியை கண்காணித்து, ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நடவடிக்கை எடுப்பார்கள்,

குறிப்பிட்ட சில சுற்றுலாப் பகுதிகளில் முச்சக்கர வண்டி சாரதிகளால் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

உள்ளூர் சுற்றுலாத் துறையின் பல பங்குதாரர்களின் ஈடுபாட்டுடன், இலங்கையிலுள்ள சுற்றுலா இடங்கள் மற்றும் நாட்டிலுள்ள சுற்றுலா ஹோட்டல்கள் பற்றிய விவரங்களையும் மொபைல் செயலி கொண்டிருக்கும்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மொபைல் செயலியில் பணம் செலுத்தும் முறையும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த புதிய செயலி மார்ச் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சுற்றுலாத் துறையின் எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்திய அமைச்சர், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இலங்கையில் பல சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்தத் தயாராகி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை