புத்தளம் கற்பிட்டி கண்டகுழி பகுதியில் இன்று அதிகாலை திடீரென சுமார் 12 திமிங்கிலங்கள் உயிருடன் கரையொதிஙகியுள்ளன.
இந்த நிலையில் மூன்று திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு கரையொதிங்கிய திமிங்கிலங்களை கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கற்பிட்டி பிரதேச கடற்படையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் கடலுக்குள் மீண்டும் அனுப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர்.
உயிரிழந்த 3 திமிங்கலங்கள்
இதன்போது திமிங்கிளங்களை கயிற்றினால் கட்டி இயந்திரப்படகு மூலம் இழுத்துக் கொண்டு சென்று கடலின் ஆழமான பகுதியில் விடுவித்தனர்.
இந்த நிலையில் உயிரிழந்த 3 திமிங்கிலங்களங்களையும் பிரேத பரிசோதனைக்கு உற்படுத்தப்பட உள்ளதாக கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு கரையொதுங்கும் திமிங்கிலங்களை பார்வையிடுவதற்காக கற்பிட்டி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், சுற்றுலா வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இன்று காலை முதல் கண்டல்குழி - குடாவ பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இவ்வாறு கடலுக்குள் இருக்கும் திமிங்கிலங்கள் கரையை நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, உயிரிழந்த திமிங்கிலங்களை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்மையில் கற்பிட்டி பகுதியில் உயிருடன் கரையொதிங்கிய புள்ளிச் சுறாவை கடற்படையினர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் இனைந்து கடலுக்குள் மீண்டும் அனுப்ப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.