சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிவாரணம் எதிர்வரும் சில தினங்களில் பெற்றுக்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்த வருடம் இலங்கை செலுத்த வேண்டிய கடனை திருப்பி செலுத்த பத்து வருட கால அவகாசம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை தற்போதைய அரசாங்கத்தை சுவாசிக்க மட்டுமே அனுமதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இனி திவாலான நாடாக இல்லை என்று அந்தத் தலைவர்கள் கூறுவார்கள் என்று கூறிய ஜனாதிபதி தற்போதைய அரசாங்கத்தால் கடனை மறுசீரமைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வந்ததன் பின்னர் டொலரின் பெறுமதி படிப்படியாக 200 அல்லது185 ரூபாவாக குறைவடையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடன் நிவாரணத்துடன் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும், எதிர்வரும் இரண்டு வருடங்களில் அபிவிருத்தியடைந்து வரும் நாட்டை அனைவரும் காண முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.