இலங்கையில் வட்டி விகிதத்தை மேலும் 2.5% அதிகரிக்க சர்வதேச நாணய நிதியம்!இலங்கையில் வங்கி வட்டி வீதத்தை மேலும் அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆனால் விவாதத்தில் கலந்து கொண்ட அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைக்கு உடன்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தற்போதுள்ள வட்டி விகிதத்தை மேலும் 2.5% அதிகரிக்க சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் வங்கி வட்டி தற்போதுள்ள விகிதத்திலேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிடுகின்றார்.
புதியது பழையவை