உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.