அம்பாறை மாவட்டத்திலிருந்து நேள்று (21) அதிகாலை வெல்லவாய காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட எல்லேக்கு குளிக்கச் சென்ற 10 இளைஞர்களில் நால்வர் மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 10 இளைஞர்களே இவ்வாறு குளிக்கச் சென்றுள்ளனர்.
இவர்களுள் 21-22 வயதிற்கு இடைப்பட்ட 04 இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர்.
இவர்களில் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும், சம்மாந்துறை மற்றும் சாய்ந்தமருதைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை வெல்லவாய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.