இந்தியாவில் பதிவான நிலநடுக்கம்!



இந்தியா - டெல்லி, உத்தர பிரதேசத்தில் நேன்று இரவு(21) திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெட்டவெளியில் தஞ்சமடைந்த மக்கள்
இதன்போது கட்டடங்கள் குலுங்கி பொருட்கள் கீழே உருண்டு விழுந்ததால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து வெட்டவெளியில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


டெல்லியில் 3 வினாடிகள் வரை இந்த நிலநடுக்கம் நீடித்ததாக கூறப்படுகிறது.

இதேவேளை உத்தர பிரதேச மாநிலம் வசுந்தரா, காசியாபாத் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


இதனால் அந்த பகுதி மக்களும் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளியில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு ரிக்டர் அளவில் 6.6 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்திலிருந்து சுமார் 184 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஆப்கானிஸ்தானை தொடர்ந்து பாகிஸ்தான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும், வட இந்திய மாநிலங்களான டெல்லி, பஞ்சாப், காஷ்மீர், அரியானா உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
புதியது பழையவை