தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ பகுதியில் லொறியின் பின்பகுதியில் வேன் ஒன்று மோதியதில் நேற்று இரவு விபத்து இடம்பெற்றுள்ளது.
வேனின் சாரதியும் அதில் பயணித்த ரஷ்ய தம்பதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெந்தோட்டை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளிநாட்டு பிரஜை தம்பதிகளை அழைத்துச் செல்லும் போது வேன் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் சாரதி மற்றும் வெளிநாட்டு தம்பதியினரின் கால்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேன் சாரதி தூங்கியதால் விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் சிக்கிய ரஷ்ய தம்பதியினர் 55 மற்றும் 59 வயதுடையவர்கள், சாரதி 25 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.