பிள்ளையானால் மிரட்டப்பட்ட மட்டக்களப்பு முன்னாள் காணி ஆணையாளர்இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததோடு தன்னை பதவியில் இருந்து நீக்குவதற்கும் முழு மூச்சாக செயற்பட்டார் என பணி நீக்கம் செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் காணி ஆணையாளர் விமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

மட்டு. ஊடக அமையத்தில் இன்று (24.03.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,கடந்த இரண்டு வருடங்களாக என்னை பதவியில் இருந்து நீக்குவதற்கு இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் முயற்சி செய்து வந்தார்.

பல தடவைகள் அவருடைய சகாக்களுக்கு காணிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்த போது அவர் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டார். என்றார்
புதியது பழையவை