யாழ். வடமராட்சி பகுதியிலுள்ள வைத்தியசாலையொன்றில் தனது அழகு கெட்டுவிடும் என தெரிவித்து பிள்ளைக்கு தாய்ப் பாலூட்டாமல் விட்ட இளம் தாயொருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு வயதான பிள்ளையை வைத்தியசாலை விடுதியில் சிகிச்சைக்காக அனுமதித்த இளம் தாயொருவர், பிள்ளையுடன் தங்கியிருந்துள்ளார்.
அந்த சமயத்தில் பிள்ளை அழும் சமயங்களில், தனது விரலை குழந்தையில் வாயில் வைத்தபடியிருந்தார்.
இதை அவதானித்த தாதியொருவர், தாய்ப்பாலுட்டாமல், ஏன் விரலை வைத்திருக்கிறீர்கள் என வினவியுள்ளார்.
குழந்தைக்கு சில மாதங்கள் மட்டுமே தாய்ப்பாலூட்டியதாகவும், பின்னர் புட்டிப்பால் பருக்கி வருவதாகவும் தெரிவித்த இளம் தாயார், தனது அழகு கெட்டு விடும் என்பதால் அவ்வாறு செயற்படுவதாக விளக்கமளித்துள்ளார்.