மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!இலங்கையில் பயன்படுத்தப்படும் 50 சதவீதத்திற்கும் அதிகமான பேரூந்துகளில் வளி மாசடையும் வகையில், புகை வெளியேறுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வளி வெளியேற்றும் வேலைத்திட்டத்தின் செயற்திட்ட பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பகுதியில் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மைக்காலமா இலங்கையில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதுடன், இதுதொடர்பில் சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை