இலங்கையில் தங்கப் பவுணொன்றின் விலை அதிகரிப்பு!இலங்கையில் தங்கப் பவுணொன்றின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த கிழமையளவில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 140000 என்ற பெறுமதிக்கு குறைந்திருந்தது.

மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை
இந்த நிலையில் குறித்த விலை வீழ்ச்சியானது ஒரு சில நாட்கள் மாத்திரமே காணப்பட்ட நிலையில் தற்போது தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்து வருகிறது.

இவ்வாறான சூழலில் கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 183,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இதேவேளை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 169,300 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அது இலங்கையிலும் தாக்கம் ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


அதன்படி நேற்றையதினம் உலக சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 19.61 டொலர் அதிகரித்து, 1,923.19 டொலராக பதிவாகியிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.
புதியது பழையவை