விடை பெற்றார் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர்.


விடை பெற்றார் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர்-யோ.ரஜனி

நன்றி கூறலும் பாராட்டுக்களும்:-

கடந்த 2018 02-10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி சார்பில் போட்டியிட்டு 8 வட்டாரங்களில் வெற்றியிட்டு கௌரவ உப தவிச்சாளர் உட்பட உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு 2018- 04-03ஆம் திகதி போரதீவுப்பற்று பிரதேசத்தில் கௌரவ தவிசாளசராக கடமையை பொறுப்பேற்று நிறுவன நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அபரிதமான ஆதரவினையும் பங்களிப்பையும் தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டிய தருனம் இது.

சவாலான பயணத்தின் போது என் பக்கத்தில் நின்று உங்கள் அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் தந்தமைக்காக எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் போரதீவுப்பற்று பிரதேசத்தின் வளர்ச்சிக்கும் அபிவிருத்தி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் சமுகம் சார்ந்த நடவடிக்கைகளுக்கும்  என்னோடு இனைந்து ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் வழங்கி செயற்பட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்  எமது போரதீவுப்பற்று பிரதேசத்தின் வளர்ச்சிக்காக இரவு பகல் பாராது அமரர் ஊர்தி சேவை குடிநீர் வழங்கல் சேவை தின்மக்கழிவகற்றல் சேவை மயான அபிவிருத்தி வேலைகள் வீதி விளக்கு பொருத்துதல் மற்றும் வீதி அபிவிருத்தி வேலைகள் போன்றவற்றுடன் சபைத்தீர்மாத்கமைவாக எமது பிரதேச எல்லைக்குட்பட்ட அனேகமான மரண வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு குடிநீர் விநியோக குழாய்கள் பதிப்பதற்கு வீதிகளினை தோண்டுதல் போன்ற சேவைகளை சபையின் செயலாளரின் ஆலோசனைக்கு அமைவாகவும் உத்தியோகஸ்தர்கள் ஊழியர்களின் ஒத்துளைப்புடனும் சிறப்பாக மேற்கொள்வதற்கு என்னோடு கைகோர்த்த அனைவருக்கும் எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்னுடன் இனைந்து  பிரதேசத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயற்பட்ட தாங்கள் அனைவரும் இனிவரும் காலங்களிலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் அதற்கு நான் எப்போதும் வழிகாட்டியாக திகழ்வேன் என உறுதியளிக்கின்றேன்.

தவிசாளர்- யோ.ரஜனி


புதியது பழையவை