யாழ்ப்பாணம் - வலி கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இரவு (16-03-2023) 8.30 மணியளவில் கோப்பாய் - மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, ஆலய திருவிழா கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பிரதேச சபை உறுப்பினரையும் அவரது மனைவியையும் பின்தொடர்ந்த மூவர் அவர்களின் வீட்டிற்கு முன்பாக வழிமறித்து மனைவி அணிந்திருந்த தங்க நகைகளை அறுக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது பிரதேசசபை உறுப்பினரும் மனைவியும் நகைகளை அறுப்பதை தடுக்க முற்பட்ட பொழுது அவர்கள் இருவர் மீதும் வாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதையடுத்து அங்கு திரண்டவர்கள் இருவரையும் மீட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.