திருகோணமலைக்கு வந்த அமெரிக்க கப்பல் !



இலங்கையில் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகைதந்த அமெரிக்கக் கடற்படையின் சால்ர்ஸ்டன் 18 என்ற கப்பல் புறப்பட்டுச் சென்றுள்ளது.

குறித்த கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி வந்த நிலையில், (12.03.2023) திகதி புறப்பட்டுச் சென்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சுமார் 127.4 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பலில் 100 பேர் பயணித்துள்ளனர்.

திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்த கப்பலின் கட்டளை அதிகாரி, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியைக் கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் சந்தித்துள்ளார்.


சுமுகமான கலந்துரையாடலின் போது, இருவரும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை