மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபையின் இறுதி அமர்வு!



மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபையின் 60ஆவது சபை அமர்வானது தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் நடைபெற்றது. எதிர்வரும் 19ம் திகதி முதல் மக்கள் சபைகள் கலைக்கப்பட்டு விசேட ஆணையாளரின் கீழ் உள்ளுராட்சிசபைகள் கொண்டுவரப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில் இறுதி அமர்வாக இந்த அமர்வு நடைபெற்றது.

வேலை திட்டங்களை மேற்கொள்வதற்காக பிரதேச சபையில் சேவையாற்றும் செயலாளர், உத்தியோர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஒத்துழைப்பு வழங்கியதற்காக தவிசாளரினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

சபையில் உறுப்பினர்களினால் இறுதியுரை நிகழ்த்தப்பட்டதுடன் மக்களுக்கும் பிரதேசசபை ஊழியர்கள், உத்தியோகத்தர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள திட்டங்களுக்கான அனுமதியும் இதன்போது வழங்கப்பட்டனர்.


புதியது பழையவை