மட்டு - அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கதிரை திருட்டு!



மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் உள்ள கதிரைகளை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கலாசாலையின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று (08.03.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - புதூரைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே இந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையின் போது சந்தேகநபரால் திருடப்பட்ட 40 கதிரைகளும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் ஆசிரியர் கலாச்சாலையில் நிர்வாகம், கடந்த 3ஆம் திகதி கதிரைகளை கணக்கெடுத்த போது 34 பிளாஸ்டிக் கதிரைகள் மற்றும் 6 மரக்கதிரைகள் உட்பட 40 கதிரைகள் காணாமல் போயுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


இவர் தினமும் கடமைமுடிந்து வீட்டுக்குச் செல்லும் போது ஒவ்வொரு கதிரைகளை திருடிக் கொண்டு சென்று அந்த பகுதியிலுள்ள கடை ஒன்றில் பிள்ளைக்கு மருந்துவேண்ட பணம் தேவை எனவும், தனது வீட்டுக்கதிரை என கூறி விற்பனை செய்துள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (09.03.2023) மட்டக்களப்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதியது பழையவை