முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன - விபத்தில் உயிரிழப்பு!அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன வீதி விபத்தொன்றில் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

இன்றைய தினம் காலை 06.45 அளவில் பொத்துவில்- அக்கரைப்பற்று பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பொடியப்பு பியசேன படுகாயமடைந்துள்ளார்.

கடுமையான காயங்களுடன் உடனடியாக அவர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.எனினும் மருத்துவர்களின் போராட்டம் பலனின்றிப் போக சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

விபத்தின் காரணமாக அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை