மட்டு வாழைச்சேனை பிரதேச சபை வாகனத்தின் இயந்திரம் காணாமல் போயுள்ளதாக - தவிசாளர் தெரிவிப்பு!



மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேச சபை வாகனத்தின் இயந்திரம் காணாமல் போயுள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.

பழுதடைந்த நிலையில் கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரதேச சபைக்குச் சொந்தமான வாகனத்தின் இயந்திரம் மர்மான முறையில் காணாமற்போயுள்ளதாக தவிசாளர் கமலநேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபைக்குச் சொந்தமான வாகனமொன்று பல வருடங்களாக பூட்டிக்கிடப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய பூட்டை உடைத்துப்பார்த்த போதே வாகனத்தின் இயந்திரம் காணாமற்போன விடயம் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் தகவல் பெறப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.

பிரதேச சபையில் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களைத் திருத்தி சேவையில் ஈடுபடுத்தும் முயற்சிகளை தவிசாளர் மேற்கொண்டுள்ளதுடன் அதன் போதே குறித்த இயந்திரம் காணாமல் போனமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை