சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


இந்த மாதத்தின் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 84 ஆயிரம்  சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் 3 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
புதியது பழையவை