தப்பியோடிய கைதி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!



கேகாலை சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதியொருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கேகாலை விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்ற கைதியொருவரே நேற்று அதிகாலை சிறைச்சாலை அதிகாரியின் துப்பாக்கி பிரயோகத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் விசாரணை
இதன்போது துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கேகாலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 33 வயதுடையே நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை