குளத்தருகில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!யாழ். சாவகச்சேரி டச்சு வீதி கண்டுவில் குளத்தருகில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இன்று (27-03-2023)காலை 8.00 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்க்கப்பட்டவர் சாவகச்சேரி தபால்கந்தோர் வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான கு.மயூரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை