25 வருடங்களுக்குள் பாரிய அபிவிருத்தி - புலம்பெயர் சமூகத்தினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி!



இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் பாரிய அபிவிருத்தி இலக்குகளை அடையும் நாடாக முன்னேற்றம் அடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று 100 வருடங்கள் பூர்த்தியாகின்ற 2048ஆம் ஆண்டில் இலங்கை நடுத்தர வருமானம் ஈட்டும் நாடாக மாறும்.



தேசிய ஒற்றுமை
அவையனைத்தும் பொருளாதார மறுசீரமைப்புக்கான அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது. இலங்கையின் இன வேறுபாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து இன மக்களுக்கும் சம அந்தஸ்து மற்றும் வளங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

உள்ளக பேச்சுவார்த்தைகள், நெருக்கமான புரிந்துணர்வு மற்றும் இனக் குழுக்களுக்கு இடையிலான பல்வகைத் தன்மையை புரிந்து கொள்வதன் மூலமே தேசிய ஒற்றுமையை மேம்படுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து இலங்கை பாரிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்ளும்.

இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் பாரிய அபிவிருத்தி இலக்குகளை அடையும் நாடாக முன்னேற்றம் அடையும். மேற்படி 25 வருடகால புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் இலக்குகளை நோக்கி அரசாங்கம் முன் செல்லும்.

எனவே நாட்டை முன்னேற்றுவதற்கான தொடர்ச்சியான வேலைத்திட்டங்களில் இணைந்து கொள்ளுமாறு புலம்பெயர் சமூகத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்
புதியது பழையவை