இலங்கையில் பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த விடுமுறையானது ஏப்ரல் 16ஆம் திகதிவரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில் மேலும், 2022ஆம் கல்வி ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக மே மாதம் 13ஆம் திகதி முதல், மே மாதம் 24ஆம் திகதிவரை, முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட விடுமுறை வழங்கப்பட உள்ளது.
தவணை விடுமுறைகள்
மூன்றாம் கட்ட விடுமுறை எதிர்வரும் ஜுலை மாதம் 21ஆம் திகதி முதல், 23ஆம் திகதிவரை வழங்கப்பட உள்ளது. 2023ஆம் கல்வி ஆண்டின், இரண்டாம் தவணை விடுமுறை, எதிர்வரும் அக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல், நவம்பர் மாதம் 12ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது.
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு | School Leave In Sri Lanka
குறித்த காலப்பகுதியில், 2023ஆம் கல்வி ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையும், க.பொ.த உயர்தரப் பரீட்சையும் இடம்பெறவுள்ளன.
மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிவரை வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.