கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாகிய சிறுமி!



பாணந்துறை தெற்கு பகுதியில் பெண்ணொருவரை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பரவூர்தியில் பயணித்த நபர்கள், சிறுமியின் வீட்டிற்கு லிப்ட் தருவதாக கூறி, தங்களுடன் பயணிக்குமாறு சிறுமியை வற்புறுத்தி அழைத்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டின்படி, சந்தேக நபர்கள் பெண்ணை வாத்துவாவில் உள்ள ஒரு கைவிடப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 3ஆம் திகதி இரவு பாணந்துறை நகரில் உள்ள கடையொன்றில் பணிபுரிந்துவிட்டு வீடு திரும்பும் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

100 இற்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பாணந்துறை தெற்கு காவல்துறையினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


சந்தேகநபர்கள் 45, 24 மற்றும் 23 வயதுடைய பாணந்துறை, அருக்கொட மற்றும் எகொடஉயன பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை