நோயாளர்கள் மீது கழன்று விழுந்த மின் விசிறி!ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில், வாராந்த வைத்திய பரிசோதனைக்காக சென்ற இரண்டு நோயாளர்கள் மீது, மின் விசிறி ஒன்று கழன்று வீழ்ந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

புற்றுநோய்க்கான வைத்திய பரிசோதனைக்கு சென்ற நோயாளர்கள் இருவரே இந்தச் சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதன்போது, குறித்த இருவரும் காயமடைந்த நிலையில், ஒருவர் அதே வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றைய நபருக்கு, சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
புதியது பழையவை