கால்நடைகளுக்கு மத்தியில் தீவிரமடையும் நோய்!கிளிநொச்சி – பூனகரி, கரைச்சி, இயக்கச்சி, பளை, உருத்திரபுரம் மற்றும் நீவில் ஆகிய பகுதிகளில் பெரியம்மை (இலம்பி) நோய் அதிகளவில் கால்நடைகளிடையே தாக்கம் செலுத்தி வந்துள்ளது என கால் நடைப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இள வயதுடைய கால்நடை உயிரினங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கால்நடைகளின் உடலில் பாரிய கொப்பளங்கள் ஏற்பட்டு, அவை பெரும் புண்ணாக மாறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிப்புக்கள்
இதனால் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டு இறக்கின்ற நிலமை காணப்படுவதாகவும், பால் உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை