புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்த யுவதி!யுவதி ஒருவர் புகையிரதம் வரும் நேரம் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து உயிரை மாய்த்து கொண்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று(21.03.2023) பயணித்த புகையிரதத்திலேயே இந்த பதற வைக்குமு் சம்பவம் றடைபெற்றுள்ளது.

பத்துலு ஓயா என்ற பகுதியில் வைத்தே 18 வயதுடைய குறித்த யுவதி இவ்வாறு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்த யுவதி புத்தளம் கறிகட்டை பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவருகிறது.

மேற்படி யுவதி புகையிரதம் வருவதை அவதானித்து விட்டு தனது கைப்பையை எறிந்து விட்டு தண்டவாளத்தில் தலையை வைத்து கொண்டதாக காவல்துறை முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் உடப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை