மகிழ்ச்சியான கடமைச் சூழலுக்கு - பட்டிருப்பு வலயத்தில் விளையாட்டு விழாமகிழ்ச்சியான கடமைச் சூழலுக்கு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை இட்டுச் செல்வதை நோக்காகக் கொண்டு மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில்
கடமையாற்றும் அதிகாரிகள்,ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கு இடையில் விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது.

வலயக் கல்வி பணிப்பாளர் சி.சிறிதரன் தலைமையில் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது.

ஆசிரியர்களை மையமாகக் கொண்டு நடாத்தப்படுகின்ற குறித்த விளையாட்டு விழாவானது வலய ரீதியில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்று வருகின்றது.
அதன் அடிப்படையில் பட்டிருப்பு கல்வி வலயமானது மூன்றாது வலயமாக குறித்த விளையாட்டு விழாவினை ஆரம்பித்துள்ளது.

ஆரம்ப விளையாட்டு நிகழ்வாக கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடை பெற்றது. இப்போட்டியில் அதிகாரிகள்,ஆசிரியர்கள்,கல்விசாரா ஊழியர்கள் என்ற அடிப்படையில் ஆண்கள்,பெண்கள் என இருபாலாரும் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். 

விளையாட்டு நிகழ்வானது நான்கு கட்டங்களாக. நான்கு நாட்களாக நடைபெறவுள்ளது.
புதியது பழையவை