பேருந்து கட்டணங்கள் குறைப்பு!இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறைந்தபட்ச கட்டணம் 30 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் மற்றும் பிற கட்டண திருத்தம் தொடர்பில் நாளை அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அனைத்து விதமான எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
புதியது பழையவை