குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!



எம்பிலிபிட்டி பகுதியிலுள்ள குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கிப் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (09.03.2023) எம்பிலிபிட்டிய - செவனகல, கட்டுபில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பெல்மடுல்ல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


பிரேதப் பரிசோதனை
குடும்பச் சுற்றுலாவாக அப்பகுதிக்குச் சென்றிருந்த குடும்ப உறுப்பினர்கள் பலர், குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது, குறித்த சிறுவன் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். அவர் மீட்டு தண்டும வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஆனாலும் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


சடலம் பிரேதப் பரிசோதனைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.


இந்தச் சம்பவம் தொடர்பில் செவனகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை