மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்; பிரிவிலுள்ள மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில், நாவற்குடா பகுதியில் நேற்றிரவு 9மணியளவில் இடம் பெற்ற விபத்தில்
19 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.
விபத்துச் சம்பவத்தில் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்று வரும் சுங்காவில் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய முகம்மட் அன்பாஸ்
என்ற இளைஞரே உயிரிழந்தவராவர்.
காத்தான்குடியில் உறவினர் வீடொன்றில் தங்கியிருந்த குறித்த இளைஞர், காத்தான்குடியில் உள்ள தனது நண்பருடன் இரண்டு துவிச்சக்கர வண்டியில் காத்தான்குடியிலிருந்து
மட்டக்களப்பு நோக்கி சென்றுள்ளனர்.
துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் மீது வாகனமொன்று மோதிவிட்டு தப்பிச்சென்றுள்ளது.
விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞரை தனது நண்பர் பொதுமக்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும், சிகிச்சை பலனின்றி அவர்
உயிரிழந்துள்ளார்.
இளைஞனை மோதித் தள்ளிய வாகனத்தின் இலக்கத் தகடு, விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து மீட்கப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.