கோதுமை மாவின் விலை குறைப்பு!



இன்று(8) முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ப்றீமா மட்டும் செரண்டிப் கோதுமை மாவின் விலைகள் 15 ரூபாவால்  குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாணின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (8) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், 450 கிராம் (ஒரு இறாத்தல்) நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாண் தற்போது, 160, 170 மற்றும் 180 ரூபா ஆகிய வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக அண்மையில் வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்திருந்தது.
புதியது பழையவை