சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பு ஐக்கிய நாடுகளின், உணவு மற்றும் விவசாய அமைப்பு என்பன இணைந்து கிழக்கு மாகாண விவசாயிகளுக்கென வழங்கிய ரி.எஸ்.பி உரம் இன்று வந்தாறுமூலையில் விநியோகிக்கப்பட்டது.
வந்தாறுமூலை கமநல அபிவிருத்தி சேவை நிலைய உத்தியோகத்தர் இஸ்மாயில் பதூர்தீன் தலைமையில் உர விநியோகம் இடம்பெற்றது. ஒரு ஏக்கருக்கு 10 கிலோ வீதம் உரம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.