உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை தீர்மானம்!உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை(03)வெள்ளிக்கிழமை கூடவுள்ளது.


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 9 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.

எனினும், நிதிப்பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் பிற்போடப்பட்டது.

இந்நிலையில் புதிய திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட காரணங்கள் பற்றி ஆராயவே தேர்தல் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது.
புதியது பழையவை