கற்றல் செயற்பாட்டுக்காக வெளியில் சென்ற போது - மாணவி பாலியல் வன்புணர்வு!வவுனியாவில் 14 வயது மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா - நெளுக்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் குறித்த சிறுமி, கற்றல் செயற்பாட்டுக்காக வெளியில் சென்ற போது இளைஞர் ஒருவரினால் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து வீடு திரும்பிய சிறுமி சம்பவம் தொடர்பில் வீட்டாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, பெற்றோர் நெளுக்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.


இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரான இளைஞரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை