மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன்பெண்ணொருவரை அவரது மருமகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய பெண்ணிற்கே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான லியனகே மேரி ஸ்வர்ணா என்பவரே இவ்வாறு தனது மருமகனால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தமைக்கான காரணம்
காணி தகராறு காரணமாக நேற்று (29) மாலை கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் காயமடைந்த பெண் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் மருமகனான 43 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கம்பஹா பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரையின் பிரகாரம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் துசித குமார மற்றும் கம்பஹா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் மோகன் சில்வா ஆகியோரின் மேற்பார்வையில் மேலும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கட்டளைத் தளபதி, பொலிஸ் பரிசோதகர் மலிந்த குமார தலைமையில் விசாரணைகள் நடத்தப்பட்டு சந்தேக நபர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை