மட்டக்களப்பு மாவட்டச் செயலக மகளிர் தின நிகழ்வு!



‘அவள் தேசத்தின் பெருமைக்குரியவள் ‘எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின்
ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் இடம்பெற்றது.

மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற, மகளிர் தின நிகழ்வில்,
2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வில் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச ரீதியில் சிறந்த தொழில் முயற்சியாளர்கள் தெருவில் வெற்றி பெற்றவர்கள், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சித்திர போட்டியில் வெற்றி பெற்றவர்கள், பெண்கள் அமைப்புகளின் நிர்வாக துறையில் செயல்படுகின்ற பெண்கள் என கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் அருணாளினி சந்திரசேகரம், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவி பணிப்பாளர் கலாராணி மற்றும் பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக பதவி நிலை மற்றும் மாவட்ட பெண்கள் அமைப்புகளின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
புதியது பழையவை